Header Logo

இந்தியா
மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

May 23, 2026 - 09:16 AM -

0

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 

பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 சதமும், டீசல் 91 சதமும் உயர்ந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.31 ஆக விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.96.98 ஆக விற்பனையாகிறது. 

மேற்காசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலிப்பதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. 

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டொலரை கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. 

இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. இந்த நிலையில்தான் இழப்பை ஈடுகட்டும் விதமாக எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வொறி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. 

இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title