Header Logo

விளையாட்டு
IPL 2026 பிளேஆஃப் அட்டவணை, மோதும் அணிகள் முழு விவரம்!

May 25, 2026 - 09:56 AM -

0

IPL 2026 பிளேஆஃப் அட்டவணை, மோதும் அணிகள் முழு விவரம்!

ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. 

இந்நிலையில், நேற்று (24) வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதியாக டாப் 4 அணிகளில் ஒன்றாக இணைந்தது. 

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரல் 38 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஷர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 60 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், பிரிஜேஷ் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற வெற்றியானது, முன்னதாக இறுதி பிளேஆஃப் இடத்திற்காக போட்டியிட்ட பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை தொடரில் இருந்து வெளியேற்றியது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்தது. 

ஐபிஎல் 2026 லீக் கட்டத்தின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் 18 புள்ளிகளில் சமநிலையில் இருந்தபோதிலும், சிறப்பான ரன் ரேட் விகிதம் ஆர்.சி.பி. அணி முதலிடத்தை பிடிக்க உதவியது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை விட குஜராத் டைட்டன்ஸ் சிறந்த ரன் ரேட் கொண்டிருந்தது, இது ஷுப்மன் கில் தலைமையிலான அணி, பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது அணியினரை புள்ளிகள் பட்டியலில் முந்தி செல்ல உதவியது. 

இதனையடுத்து, நேற்று இரவு ஐ.பி.எல். 2026 டி20 தொடரின் 70 ஆவது போட்டியில் (இறுதி லீக் போட்டி) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

இதனால் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 203 ஓட்டங்களை குவித்தது. 

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 60 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சவுரப் தூபே 2 விக்கெட்களையும், அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 63 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் நிகிடி 3 விக்கெட்களையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

ஐபிஎல் 2026 பிளேஆஃப் போட்டிகளின் விவரங்கள், 

தகுதிச்சுற்று 1: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ vs குஜராத் டைட்டன்ஸ் 

திகதி: 26.05.2026 

நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரப்படி) 

இடம்: இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா 

எலிமினேட்டர் போட்டி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 

திகதி: 27.05.2026 

நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரப்படி) 

இடம்: மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், முல்லன்பூர், நியூ சண்டிகர் 

தகுதிச்சுற்று 2: தகுதிச்சுற்று 1 இல் தோல்வியடைந்த அணி vs எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணி 

திகதி: 29.05.2026 

நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரப்படி) 

இடம்: மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், முல்லன்பூர், நியூ சண்டிகர் 

இறுதிப் போட்டி: தகுதிச்சுற்று 1 சுற்றில் வெற்றி பெற்ற அணி vs தகுதிச்சுற்று 2 இல் வெற்றி பெற்ற அணி 

தேதி: 31.05.2026 

நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரப்படி) 

இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title