Header Logo

பல்சுவை
இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது!

May 25, 2026 - 10:27 AM -

0

இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது!

காலை உணவுதான் நம்ம ஆரோக்கியத்தை தீர்மானிக்குது. அது நம்மை ஆரோக்கியமாகவும் வைக்கலாம், நோயாளி ஆக்கவும் செய்யலாம். பலரும் தங்களுக்குப் பிடித்தமான காலை உணவுகளை தினமும் சாப்பிடுறாங்க. அவை சுவையாக இருந்தாலும், உடலுக்கு நல்லதல்ல. இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது. ஏன்னா, இதுல ஊட்டச்சத்து குறைவு, கலோரிகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு எல்லாம் அதிகம். 

மைதாவால் செய்யப்பட்ட சேமியாவில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் ரொம்ப குறைவு. இதில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்தான் இருக்கு. இது சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை உயர்வு போன்ற பிரச்சனைகளை அதிகப்படுத்தும். உங்களுக்கு உப்புமா பிடிக்கும்னா, கோதுமை அல்லது கம்பு சேமியாவில் காய்கறிகள் சேர்த்து செஞ்சு சாப்பிடுங்க. அது ஒரு ஆரோக்கியமான தேர்வா இருக்கும். 

மைதா மாவில் செஞ்ச தோசை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தராது. ஏன்னா, இதுல நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் குறைவு. சுத்திகரிக்கப்பட்ட மைதா செரிமானத்தை மெதுவாக்கி, ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். இதனால உடல் எடையும் கூடும். இதுக்கு பதிலா, பாரம்பரிய உளுந்து, அரிசி மாவு தோசை அல்லது சிறுதானிய தோசையை சாப்பிடுங்க. அது ஆரோக்கியமான காலை உணவா இருக்கும். 

ரவை உப்புமாவும் வெறும் கார்போஹைட்ரேட்டை மட்டுமே கொடுக்கும். இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் இல்லை. இதனால, காலையில இதை சாப்பிட்டா சீக்கிரமே பசி எடுக்கும், சோர்வாகவும் உணர்வீங்க. சிறுதானிய அல்லது கோதுமை ரவையைப் பயன்படுத்துங்க. நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க நிறைய காய்கறிகளைச் சேருங்க. 

நிறைய இந்தியர்களுக்கு காலையில் பூரி சப்ஜி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். ஆனா, இதுல எண்ணெய், கலோரிகள், கொழுப்பு அளவு ரொம்ப அதிகம். தினமும் காலையில இதை சாப்பிட்டா, உடல் எடை வேகமாக அதிகரிக்கும். செரிமான அமைப்பும் பாதிக்கப்படலாம். 

இனிப்புப் பொங்கலில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் வெல்லம் அதிகமாகப் பயன்படுத்தப்படுது. இதனால், இது ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இதில் கவனமாக இருக்கணும். காலை உணவில் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. 

காலை உணவாக நீங்க பாசிப்பருப்பு சில்லா, காய்கறி ஓட்ஸ், முளைகட்டிய பயறு சாலட், சிறுதானிய தோசை, அவித்த முட்டை மற்றும் பிரவுன் பிரெட், பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். நிறைய காய்கறிகள் சேர்த்த அவல் உப்புமாவும் சாப்பிடலாம்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title