Header Logo
Mogo Academy

விளையாட்டு
இறுதிப் போட்டியில் நுழைவது யார்?

May 26, 2026 - 07:03 PM -

0

இறுதிப் போட்டியில் நுழைவது யார்?
Mobitel inner

நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமாகியது. கடந்த 24 ஆம் திகதி அனைத்து லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. 

நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. 

பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 10 ஆவது இடங்களைப் பிடித்து வெளியேறின. 

தர்மசாலாவில் இன்று (26) நடைபெறும் குவாலிபையா்-1 (முதல் தகுதிச்சுற்று) ஆட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூரும், இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து, ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குஜராத்தை வீழ்த்தி 5 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது. 

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பெங்களூருவை தோற்கடித்து 3 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara