Header Logo

விளையாட்டு
ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர்!

May 27, 2026 - 03:25 PM -

0

ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர்!

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்மசாலாவில் நேற்று (26) நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்களை குவித்தது. 

இதனைத் தொடர்ந்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது. 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறியது. 

இந்தப் போட்டியின்மூலம், ஐபிஎல் பிளேஆஃப்-பில் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. ஒரே தொடரில் 9 முறை 200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த அணிகள் பட்டியலில் இணைந்துள்ளது. 38 பவுண்டரிகளுடன் ஐபிஎல் பிளேஆஃப்பில் அதிகபட்ச பவுண்டரிகளை விளாசிய அணி என்ற சாதனையையும் ஆர்சிபி படைத்துள்ளது. 

இந்தப் போட்டியின் மூலமாக விராட் கோலி புதிய சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 25 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு சீசன்களில் 600 ஓட்டங்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 

2023 சீசன் முதல் நடப்பு சீசன் வரை தொடர்ந்து 4 சீசன்களாக 600+ ஓட்டங்கள் எடுத்திருக்கிறார் விராட் கோலி. இதில், 2024 இல் மட்டும் மொத்தமாக 741 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

முன்னதாக, கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் 600+ ஓட்டங்களை குவித்திருந்தனர். ஆனால், தற்போது கோலி தொடர்ச்சியாக நான்கு சீசன்களில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

விராட் கோலி ஒட்டுமொத்தமாக ஆறு ஐபிஎல் சீசன்களில் 600+ ஓட்டங்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்களில் 600+ ஓட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில், கோலிக்கு அடுத்தபடியாக கே.எல். ராகுல் உள்ளார். அவர் இந்தச் சாதனையை நான்கு முறை நிகழ்த்தியுள்ளார். 

அதேபோல், ஐபிஎல் வரலாற்றில் 8 அணிகளுக்கு எதிராக 500+ ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நேற்று படைத்தார். இதற்கிடையே, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த ஒட்டுமொத்த ஓட்டங்களை விட ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்திருக்கிறார். விராட் டெஸ்ட் போட்டிகளில் 9,230 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் 9261 ஓட்டங்களை விளாசியிருக்கிறார்.


MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title