May 29, 2026 - 04:29 PM -
0
டிவி தெரணவால் ஏற்பாட்டில், 24 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் இலங்கையின் மிகப்பெரிய தன்சல் நாளை (30) மற்றும் மறுதினம் (31) கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாளை மாலை 07:00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த தன்சல், மறுநாள் மாலை 07:00 மணி வரை நடைபெறவுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு டிவி தெரணவினால் நடத்தப்படும் இந்த தன்சல், 2024 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இது இம்முறை மூன்றாவது தடவையாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழில்முறை சமையற்கலைஞர்கள் சங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இதற்காக டிவி தெரணவுடன் கைகோர்த்துள்ளன.

