Header Logo

செய்திகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி

May 29, 2026 - 08:12 PM -

0

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். 

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். 

இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

சம்பவம் குறித்து நுவரெலியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title