Header Logo

செய்திகள்
சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொடூரக் கொலை!

May 31, 2026 - 10:11 AM -

0

சென்னையில் இலங்கை தமிழ் பெண் கொடூரக் கொலை!

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் சிலர் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.


நிலைமை கையை மீறிச் சென்றதால், பாரில் இருந்த பவுன்சர்கள்  இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பாரை விட்டு வெளியேற்றினர்.


பாரை விட்டு வெளியே வந்த பிறகும் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை. வீதியில் வைத்து மீண்டும் இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர்.


இந்த மோதலின் உச்சகட்டமாக, ஒரு தரப்பினர் ஆத்திரத்தில் எதிர்தரப்பினர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.  


இந்த சம்பவத்தில் யான்சி என்ற பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் என்பது தெரியவந்துள்ளது.


யான்சியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுமிக்கும் இந்த மோதலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அச்சிறுமி தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இந்த கொடூரக் கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பார் தகராறில் பெண் ஒருவர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title