Header Logo
Mogo Academy

பல்சுவை
ஆசையாக வளர்த்த செல்லப்பிராணிக்கு நேர்ந்த சோகம்!

Jun 5, 2026 - 05:15 PM -

0

ஆசையாக வளர்த்த செல்லப்பிராணிக்கு நேர்ந்த சோகம்!
Mobitel inner

சீனாவில் குவோ என்பவர் தனது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து, அதனை சமூகவலைதளத்தில் பதிவிடும் பயண Vlogger ஆக இருந்து வருகிறார். 

இவர் செல்லப்பிராணியான 8 வயது சுடோ என்ற நாயை வளர்த்து வருகிறார். இவரை 15 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். 

கடந்த வாரம் சீனாவின் ஹெனான் நகரில் உள்ள தனது பெற்றொர்களிடம் நாய்க்குட்டியை விட்டுவிட்டு, ஜார்ஜியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக குவோ சென்றார். 

இதையடுத்து சம்பவத்தன்று இரண்டு பேர் சுடோவை கடத்திச் சென்று, சுமார் 2,400 ரூபாய்க்கு ஒரு உணவகத்தில் விற்றனர். 

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பொலிஸார், அறிமுகமில்லாத நபர்கள் நாயைக் கடத்தி சென்று விற்பனை செய்தததை கண்டுபிடித்தனர். 

இதைத்தொடர்ந்து சுடோவைக் கடத்திச் சென்ற நபர்களை தொடர்பு கொண்டு, நாய்க்கு பதிலாக 1.4 லட்சம் ரூபாய் தருவதாக குவோ கூறினார். 

இதற்கு நாயை திருடிச் சென்ற நபர்கள், “அதை ஏற்கனவே ஒரு உணவகத்திற்கு மாமிசத்திற்காக விற்றுவிட்டோம்” என்று கூறியுள்ளனர். இதையடுத்து உணவகத்தின் உரிமையாளரை குவோ தொடர்புகொண்ட போது, அந்த நாய் வெகு காலத்திற்கு முன்பே வெட்டி சமைக்கப்பட்டதாக கூறியுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த குவோ, நாயைத் திருடிச் சென்ற நபர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara