Jun 6, 2026 - 01:51 PM -
0
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்லும் இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஷ்ரேயாஸ் அய்யர் அணி தலைவராகவும், திலக் வர்மா துணை அணி தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் (அணி தலைவர்), திலக் வர்மா (துணை அணி தலைவர்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, வைபவ் சூர்யவன்ஷி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ்.
மோசமான பார்ம் காரணமாக டி20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து சூர்யகுமாய் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

