Header Logo

செய்திகள்
சுரேஷ் சலேயின் மனைவி, CID பணிப்பாளருக்கு அவசர கடிதம்!

Jun 8, 2026 - 08:59 AM -

0

சுரேஷ் சலேயின் மனைவி, CID பணிப்பாளருக்கு அவசர கடிதம்!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, 

தமது கணவர் சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமது கணவரை, தமக்கும், தமது பிள்ளைக்கும் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில், தனது கணவர் சார்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணிகளுக்கு, அவரைச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்குமாறு அவர் அக்கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தனது கணவர் தற்போது மேற்கொண்டு வரும் ஆபத்தான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு அவரை ஊக்குவிக்க, சட்டத்தரணிகளின் சந்திப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என மனோரி சலே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்தத் தீர்மானமிக்க இக்கட்டான தருணத்தில் தனது கணவருக்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமன்றி, சட்ட ரீதியான மற்றும் மன ரீதியான ஆதரவும் மிகவும் அத்தியாவசியமானது என்றும் அவர் அந்த கடிதத்தின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

MOST READ

காணொளி
எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

title