Header Logo

சினிமா
ரஜினிகாந்தை செருப்பால் அடிப்பேன் சொன்ன இயக்குநர்!

Jun 8, 2026 - 11:31 AM -

0

ரஜினிகாந்தை செருப்பால் அடிப்பேன் சொன்ன இயக்குநர்!

தமிழ் சினிமாவில் 1975 இல் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கினார். 

1978 இல் வெளியான தப்பு தாளங்கள் படத்தில் ஒரே நேரத்தில் தமிழ், கன்னட என இரு மொழிகளில் வெளியாகி முக்கிய ரோலில் ரஜினிகாந்த் நடித்தார். 

அப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார். 

அதில், தப்புத் தாளங்கள்(கன்னடத்தில் தப்பித தாளா) படத்தின் ஷூட்டிங்கின்போது ஒருநாள் இரவு 7 மணி அல்லது 8 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து என்னுடைய அறைக்கு சென்றுவிட்டேன். ஷூட்டிங் முடிந்துவிட்டது என்று மது அருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். 

அப்போடு இரவு 10 மணிக்கு பாலசந்தரின் உதவி இயக்குநர் அமீர்கான் வந்து, சார் உங்களை அழைக்கிறார் என்றார். மது அருந்திருந்த நிலையில் சாரின் முன் எப்படி போவது என்று தெரியாமல் அவசர அவசரமாக குளித்துவிட்டு, வாய்ல் ஸ்ப்ரே அடித்துக் கொண்டு சென்றேன். பாலச்சந்தர் சார் அருகில் செல்லாமல் தள்ளியே நின்றாலும் அவருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. 

அதன்பின் என்னை தனியாக ஓர் அறைக்கு அழைத்துச் சென்றுவர் எனக்கு நாகேஷ் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியும் சார் என்று சொன்னேன். நாகேஷ் முன்னாள் நீ ஒரு துரும்புக்குக் கூட சமமில்லை என்றார். மது பழக்கத்தினால் நாகேஷ் தன் வாழ்க்கையையே வீணாக்கிக் கொண்டான். 

இனிமேல் படப்பிடிப்பு தளத்திலோ அல்லது மெக்கப் போட்டிருக்கும் போதோ, நீ மது அருந்தியதாக தெரிந்தால், உன்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னார். இந்த கடுமையான வார்த்தைகள் என் மனதை ஆழமாக தைத்தன. 

அன்றில் இருந்து இன்று வரை ஜம்மு - காஷ்மீர் என எவ்வளவு குளிரான இடங்களுக்கு ஷூட்டிங் சென்றாலும் மேக்கப் போட்டிருக்கும்போது மது அருந்துவதில்லை என்ற உறுதியை எடுத்தேன். 

நாகேஷ் தன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு, ஒரு காலத்தில் போதைக்கு அடிமையானதுட்னான் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

title