Header Logo
Mogo Academy

விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சுப்மன் கில்!

Jun 8, 2026 - 02:07 PM -

0

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த சுப்மன் கில்!
Mobitel inner

இந்திய டெஸ்ட் அணியின் அணி தலைவர் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். 

 

முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2 ஆவது நாளில் அபாரமாக விளையாடிய அவர் 126 ஓட்டங்கள குவித்தார். இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணி தலைவராக தனது 6 ஆவது சதத்தை பதிவு செய்ததுடன், அணி தலைவராக 1,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அணி தலைவராக 1,000 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த 101 வீரர்கள் உள்ளனர். அவர்களில் அணி தலைவராக 82.76 என்ற பேட்டிங் சராசரியுடன் சுப்மன் கில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் மட்டும் 101.51 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். 

இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா 69.6 சராசரியுடன் 3 ஆவது இடத்தில் இருக்கிறார். குறிப்பிடத்தக்க வகையில், டெஸ்ட் வரலாற்றில் வேறு எந்த அணி தலைவரும் 70 இற்கும் மேற்பட்ட சராசரியை பதிவு செய்யவில்லை. 

மேலும், இந்திய டெஸ்ட் அணி தலைவர்களில் மிக வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். அவர் வெறும் 15 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மட்டுமே 14 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தி கில்லுக்கு முன்னிலையில் உள்ளார். 

போட்டியின் 2 ஆவது நாளை 368/3 என்ற கணக்கில் ஆரம்பித்த இந்திய அணி, தொடர்ந்து அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 3 ஆவது நாளின் போது 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 412 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் செய்யப்பட்டு தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 

இந்திய அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara