Header Logo
SLIC
உலகம்
பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்வி - மைக்கை தூக்கி வீசி வெளியேறிய டிரம்ப்

Jun 8, 2026 - 02:24 PM

பெண் தொகுப்பாளர் கேட்ட கேள்வி - மைக்கை தூக்கி வீசி வெளியேறிய டிரம்ப்
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

பின்னர் டிரம்ப் NBC தொலைக்காட்சியின் 'மீட் தி பிரஸ்' (Meet The Press) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுப்பாளரின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார். 

NBC நிறுவனத்தின் பெண் தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர், டிரம்ப்பிடம் ஈரான் போர், உக்ரைன் ரஷ்யா போர், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்கு டிரம்ப் பதிலளித்தார். 

பின்னர் கிறிஸ்டன் வெல்கர் கலிபோர்னியாவில் நடைபெறும் தற்போதைய தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் கூறிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நான்கு நாட்கள் ஆகியும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் எதிர்கட்சியினரான ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் மோசடி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

அப்போது இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கர் கேட்க, அதற்கு நான் அதனை கவனித்து சொல்வதே போதுமானது எனக் கூறினார். உடனடியாக உங்கள் கருத்தை மட்டுமே ஆதாரமாக ஏற்க முடியாதே என்ற தொகுப்பாளர் கூற, அதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், உங்களைப் போலவே ஜனநாயகக் கட்சியினரும் நேர்மையற்றவர்கள், நீங்கள் ஒரு முட்டாள் என காட்டமாக பதிலளித்தார்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278