Header Logo
SLIC
உலகம்
ட்ரம்பின் விசா கட்டண அதிகரிப்பு முடிவு சட்டவிரோதம் என தீர்ப்பு

Jun 9, 2026 - 10:01 AM

ட்ரம்பின் விசா கட்டண அதிகரிப்பு முடிவு சட்டவிரோதம் என தீர்ப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H-1B விசா கட்டணத்தை 100,000 டொலர்என்ற அளவில் உயர்த்தியிருந்தது. 

அமெரிக்கர்களுக்கு உள்நாட்டில் அதிக வேலைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வு அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. 

இவ்வளவு பெரிய தொகையை செலுத்த நேரிட்டால், திறமையான வைத்தியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்களை வேலைக்கு எடுக்க முடியாது என்று கூறி 20 அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில், ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கட்டண உயர்வை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் மாசசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோ சொரோகின் நேற்று வழங்கிய தீர்ப்பில், அமெரிக்க பாராளுமன்றின் முறையான அனுமதி இல்லாமல், H-1B மீது இவ்வளவு பெரிய தொகையை விதிப்பது கட்டணம் அல்ல, அது வரி விதிப்பிற்குச் சமம். எனவே இந்த அரசாங்கக் கொள்கை சட்டவிரோதமானது. 

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாக விதிக்க எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தார்.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278