Header Logo
SLIC
செய்திகள்
அமெரிக்க விசா கட்டணம் உச்சம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அதிரடி!

Aug 24, 2026 - 08:25 PM

அமெரிக்க விசா கட்டணம் உச்சம்: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய அதிரடி!
Mobitel Inner 1278
EDEX Inner

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான புதிய விதப்புரை ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் இன்று (24) வெளியிட்டுள்ளது.

 

ஜனாதிபதி டிரம்பினால் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இந்தக் கட்டண உயர்வை நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது.

 

தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் பெரிதும் நம்பியிருக்கும் இந்த விசாக்களுக்கான செலவு இதன் மூலம் மிக அதிகளவில் உயரும்.

 

முன்னதாக, மத்திய நீதிபதி ஒருவர் இந்தக் கட்டண உயர்வு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்து, அதை வசூலிப்பதிலிருந்து டிரம்ப் நிர்வாகத்தைத் தடுத்திருந்தார்.

 

கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி டிரம்பின் இந்த உத்தரவு, பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் செப்டம்பர் மாதத்துடன் காலாவதியாகவுள்ளது.

 

எனினும், அதனை உறுதிப்படுத்தி விதிகளை ஒப்புக்கொள்ளுமாறு அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் திணைக்களத்தால் முன்மொழியப்பட்ட 103,265 டொலர் கட்டணம் இன்று ஃபெடரல் பதிவேடு வாயிலாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (25) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

 

அத்துடன் 30 நாட்கள் கொண்ட பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் கால அவகாசம் ஆரம்பமாவதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சட்டம் இறுதி ஒப்புதலைப் பெறக்கூடும்.

 

சிறப்புத் துறைகளில் பயிற்சி பெற்ற வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதற்காக H-1B திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 65,000 விசாக்களும், உயர் பட்டதாரிகளுக்காக மேலும் 20,000 விசாக்களும் 3 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கு வழங்கப்படுகின்றன.

 

முன்னர் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 2,000 முதல் 5,000 டொலர்கள் வரை இருந்த இந்த விசா கட்டணம், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இவ்வாறு பாரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

 

அமெரிக்க ஊழியர்களுக்குப் பதிலாக மலிவான வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்கள் இந்த H-1B திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவிக்கிறார்.

 

எனினும், தகுதியான அமெரிக்க ஊழியர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கும், சிறந்த திறமையாளர்களைப் பணிக்கு அமர்த்துவதற்கும் இந்த விசா திட்டம் மிகவும் அவசியமானது என வர்த்தகச் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278