Jun 10, 2026 - 10:55 AM -
0
இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற நேருவின் சாதனையை இந்திய பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவரான நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பாஜக களம் இறங்கியது. இந்தத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. அங்கு தொடங்கிய பாஜகவின் வெற்றி பயணம் 2024 பாராளுமன்ற தேர்தல் வரை தேசிய அளவில் தொடர்ந்து வருகிறது.
2014, 2019 மற்றும் 2024 என தொடர்ந்து மூன்று முறை மத்தியில் பாஜக ஆட்சி எனும் புதிய சாதனையை ஏற்கனவே படைத்துள்ள பாஜக, தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தும், சில மாநிலங்களில் அதன் இருப்பை பலப்படுத்தியும் வருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார். இதன் பிறகு நாட்டை வெகு நாட்கள் ஆண்ட பிரதமராக நேரு இருந்துவருகிறார். அதாவது இந்தியாவில் நீண்ட கால பிரதமராக முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மொத்தம் 4,398 நாட்கள் பதவி வகித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் நீண்ட நாட்களாக பிரதமர் பதவி வகித்தவர் என்ற நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். இன்று (10) உடன் தொடர்ந்து 4 ஆயிரத்து 400 நாட்களாக பதவியில் நீடித்த ஒரே இந்திய பிரதமர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளார் மோடி. அவருக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

