Jun 10, 2026 - 01:35 PM -
0
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (10) டெல்லி செல்ல இருக்கின்றார். அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக தற்போது டெல்லி செல்கிறார். ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சராக முதல் முறையாக டெல்லி சென்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் விஜய். அப்போது டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தவெக தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அவர்கள் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு மட்டுமல்லாமல் அவர்களுடன் கூட்டணியும் வைத்துக்கொண்டார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
எனவே முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் டெல்லி பயணத்தின்போது விஜய் கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த சந்திப்பு நடக்கவில்லை. இது சற்று சர்ச்சையாக பேசப்பட்டது. டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் மோடியை மட்டும் சந்தித்துவிட்டு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி பதிலளித்து இருந்தார். முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு வந்திருந்த போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேறு வேலைகளில் பிசியாக இருந்ததால் அவரால் நேரம் ஒதுக்கமுடியவில்லை. அதனால் தான் இந்த சந்திப்பு நடக்கவில்லை. அடுத்த முறை முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு வரும்போது கண்டிப்பாக காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் எனவும் உறுதியளித்து இருந்தார் பிரவீன் சக்கரவர்த்தி.
இந்நிலையில் தற்போது முதலமைச்சர் விஜய் டெல்லிக்கு செல்ல இருக்கும் நிலையில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை விஜய் இன்று மாலை சந்திக்க இருப்பது உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களை முதலமைச்சர் விஜய் இந்த டெல்லி பயணத்தில் கண்டிப்பாக சந்திப்பார் என தகவல்கள் வருகின்றன.
இதன் மூலம் முதலமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் சந்திக்கவில்லை என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக டெல்லி செல்ல இருக்கின்றார் முதலமைச்சர் விஜய்.
நாளை (11) நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் இன்றே முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட இருக்கின்றார். அநேகமாக இன்று மாலைக்குள் முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிறகு இன்று மாலையே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை விஜய் சந்திக்கலாம் என சொல்லப்படுகின்றது. விரைவில் இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகின்றது.
இந்நிலையில் கடந்த முறை விஜய் டெல்லி சென்று திரும்பியபோது அவர் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. பல தரப்புகளில் இருந்தும் இந்த சந்திப்பு ஏன் நடக்கவில்லை என கேள்விகள் எழுந்தன. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்த பிறகு விஜய்யின் முதல் டெல்லி சந்திப்பு இது என்பதால் கண்டிப்பாக ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்களை அவர் சந்திப்பார் என்றே உறுதியாக சொல்லப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது முதலமைச்சர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு எம். பி பதவி வழங்கி இருக்கின்றார். இதன் மூலம் இவர்களுக்குள் எந்த ஒரு பிரச்னையும் இல்லை என தெரிய வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் விஜய் இன்று மாலை காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பார் என செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

