Jun 12, 2026 - 11:30 AM -
0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் ரூபாய் 650 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் 2 வின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு பலவகையான கெட்டப் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும், ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் சென்னை படப்பிடிப்பில் ஹிருத்திக் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினிகாந்தின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் நடித்திருந்தார்.
இதையடுத்து ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினியுடன், 40 ஆண்டுகளுக்கு பின்பு எந்த கதாபாத்திரத்தில் ஹிருத்திக் நடிப்பார் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

