Header Logo

உலகம்
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் - ஈரான் அறிவிப்பு

Jun 13, 2026 - 05:50 AM -

0

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் - ஈரான் அறிவிப்பு

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். 

அதில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விடயங்களும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஒப்பந்தத்தில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகையை நீக்குவதும் அடங்கும் என்றும், ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் தொடங்கும் என செய்ட் அப்பாஸ் அராக்சி அரச தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது கடமைகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தே அமையும் என்று கூறி, அமெரிக்க அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். 

பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது. 

இது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் வித்திட்டது. 

அத்துடன் உலகின் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை திறம்பட மூடவும் வழிவகுத்தது. 

ஏப்ரல் மாதத்தில் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்த போதிலும், அமெரிக்காவும் ஈரானும் இந்த வாரம் பரஸ்பர தாக்குதல்களை நடத்தியிருந்தன. 

இந்நிலையில் அமெரிக்க - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனினும் இது தொடர்பில் எவ்வித உத்தியோகப்பூர்வ முடிவுகளும் வௌியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title