Header Logo

விளையாட்டு
2026 உலகக் கிண்ணத்தில் வரலாறு படைக்கும் இந்திய வம்சாவளி வீரர்!

Jun 16, 2026 - 01:01 PM -

0

2026 உலகக் கிண்ணத்தில் வரலாறு படைக்கும் இந்திய வம்சாவளி வீரர்!

2026 FIFA கால்பந்து உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் சர்ப்ரீத் சிங், ஒட்டுமொத்த இந்திய மற்றும் பஞ்சாபி சமூகத்தினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றிலேயே களம் காணும் முதல் சீக்கிய வீரர் என்ற பெருமையைப் பெற்று அவர் புதிய வரலாறு படைக்கவுள்ளார். 

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் பிறந்த சர்ப்ரீத் சிங்கின் பெற்றோர் பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 7 வயதிலிருந்தே கால்பந்து விளையாடத் தொடங்கிய இவர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் முன்னணி கிளப் அணிகளுக்காக விளையாடித் தனது திறமையை நிரூபித்தார். 2019 ஆம் ஆண்டில் உலகின் புகழ்பெற்ற "பேயர்ன் மியூனிக்" கிளப் அணியில் இணைந்து, ஜெர்மனியின் உயரிய 'பூண்டெஸ்லிகா' தொடரில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 

2018 இல் மும்பையில் நடந்த இன்டர்காண்டினென்டல் கிண்ணத்தில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களுக்கு அசிஸ்ட் செய்து இந்தியக் கால்பந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கடுமையான முழங்கால் காயம் காரணமாக, அவர் உலகக் கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. 

ஆனால், தீவிரப் பயிற்சி மற்றும் விடாமுயற்சியால் ஏப்ரல் மாதமே களத்திற்குத் திரும்பிய அவர், நியூசிலாந்தின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் தனது இடத்தை உறுதி செய்தார். தற்போது 27 வயதாகும் சர்ப்ரீத் சிங், நியூசிலாந்து தேசிய அணிக்காக இதுவரை 24 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 3 கோல்களை அடித்துள்ளார். 

இதுகுறித்து சர்ப்ரீத் சிங் கூறுகையில், "உலகக் கிண்ணத்தில் விளையாடும் முதல் சீக்கிய கால்பந்து வீரர் நான் தான் என்று பலரும் என்னிடம் கூறினர். எனது கலாச்சாரத்தையும் மக்களையும் உலக மேடையில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகுந்த பெருமையும் பொறுப்பும் கொள்கிறேன். இது அடுத்த தலைமுறை இந்தியக் குழந்தைகள் உலக அரங்கிற்கு வர ஒரு உத்வேகமாக இருக்கும் என நம்புகிறேன். என்றார். 

"குரூப் 'G' பிரிவில் பெல்ஜியம், ஈரான் மற்றும் எகிப்து போன்ற வலுவான அணிகளுடன் நியூசிலாந்து மோதவுள்ளது. நியூசிலாந்து தனது முதல் லீக் போட்டியில் ஈரானை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணிக்காக இவர் விளையாடினாலும், இந்திய வம்சாவளி வீரர் என்பதால் இந்திய ரசிகர்களின் ஆதரவும் இவருக்குப் பெருகி வருகிறது.


MOST READ

காணொளி
செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

title