Header Logo
SLIC
ஜோதிடம்
முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்?

Jun 17, 2026 - 10:49 AM

முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்?
Mobitel Inner 1278
EDEX Inner

கணிதத்தின்படி, ஒருவருடைய பிறந்த திகதியை வைத்து அவர்கள் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு அங்கமாகும். எண் கணிதம் மூலம் ஒருவரின் ஆளுமை, நிகழ்காலம், எதிர்காலம், தொழில் வாய்ப்புகள், முன் ஜென்ம பந்தங்கள், கர்ம வினைகளை நம்மால் கணிக்க முடியும். இந்த பதிவில் நம் பிறந்த திகதியை வைத்து நாம் முன் ஜென்மத்தில் என்னவாக பிறந்திருப்போம் என்பதையும், நம் கடந்த கால வினைகள் மற்றும் இந்த ஜென்மத்தின் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம். வாருங்கள் விரிவாகப் பாப்போம். 

மூல எண் 1 (பிறந்த திகதிகள் 1, 10, 19, 28) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: அரசர், ராணி, ராணுவத் தளபதி, அல்லது ஒரு நாட்டின் முக்கியத் தலைவர். 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் நீங்கள் மிகப்பெரிய அதிகாரத்திலும், தலைமைப் பொறுப்பிலும் இருந்திருக்கிறீர்கள். பிறரை வழிநடத்தும் அதிகாரம் உங்களிடம் இருந்தது. ஆனால், சில நேரங்களில் உங்கள் சுயநலம் அல்லது சர்வாதிகாரப் போக்கு மற்றவர்களைப் பாதித்திருக்கலாம். 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்திலும் உங்களிடம் தலைமைப் பண்பு இயல்பாகவே இருக்கும். ஆனால், இந்த முறை அதிகாரத்தைக் காட்டாமல், பிறருக்கு உதவும் நல்ல தலைவனாக வாழ வேண்டும். 

மூல எண் 2 (பிறந்த திகதிகள்: 2, 11, 20, 29) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: கலைஞர், தூதுவர், ஆலோசகர், அல்லது காதலில் தோற்றவர். 

விளக்கம்: நீங்கள் கடந்த ஜென்மத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய, கலை நயம் மிக்க ஒருவராக வாழ்ந்திருக்கிறீர்கள். அமைதியை விரும்பிய நீங்கள், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பீர்கள். ஆனால், மற்றவர்களால் ஏமாற்றப்பட்டு, மனக்காயங்களுடன் இறந்திருக்க வாய்ப்பு உண்டு. 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்தில் நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவதைக் குறைத்துக் கொண்டு, மற்றவர்களைக் குருட்டுத்தனமாக நம்பாமல், சுயசார்போடு வாழப் பழக வேண்டும். 

மூல எண் 3 (பிறந்த திகதிகள்: 3, 12, 21, 30) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: எழுத்தாளர், தத்துவஞானி, மதகுரு, அல்லது ஆசிரியர். 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் அறிவாற்றல் மிக்கவராகவும், சிறந்த பேச்சாளராகவும் இருந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களால் பலரை ஈர்த்திருப்பீர்கள். ஆனால், உங்களது திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் அல்லது சில ரகசிய அறிவை உலகிற்குச் சொல்லாமல் மறைத்திருக்கலாம். 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்தில் உங்கள் படைப்பாற்றலையும், பேச்சுத்திறனையும் உலகிற்கு நன்மையான விஷயங்களுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். 

மூல எண் 4 (பிறந்த திகதிகள்: 4, 13, 22, 31) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: கட்டிடக் கலைஞர், விவசாயி, விஞ்ஞானி, அல்லது அடிமை/கடின உழைப்பாளி. 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைத்தவர். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அடித்தட்டு மக்களுக்காகவோ அல்லது ஏதேனும் ஒரு பெரிய கட்டுமானப் பணிக்காகவோ உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருப்பீர்கள். சொகுசான வாழ்க்கை உங்களுக்குக் கிடைத்திருக்காது. 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்தில் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் சில தடைகள் வரலாம். ஆனால், விடாமுயற்சியுடன் உழைத்து, நேர்மையான வழியில் உங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஜென்மத்தின் விதி. 

மூல எண் 5 (பிறந்த திகதிகள்: 5, 14, 23) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: கடற்பயணி, நாடோடி, வியாபாரி, அல்லது சூதாடி. 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் உங்களுக்கு எல்லையே கிடையாது. ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காமல் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்திருப்பீர்கள். சுதந்திரத்தை அதிகம் நேசித்த நீங்கள், சில நேரங்களில் பொறுப்பில்லாமல் வாழ்ந்து, குடும்பக் கடமைகளைத் தவறியிருக்கலாம். 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்திலும் உங்களுக்குப் பயணம் செய்வது பிடிக்கும். ஆனால், சுதந்திரமாக இருக்கும் அதே வேளையில், உங்கள் குடும்பம் மற்றும் சமூகக் கடமைகளில் இருந்து ஓடாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 

மூல எண் 6 (பிறந்த திகதிகள்: 6, 15, 24) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: வைத்தியர், செவிலியர், ஆன்மீகக் குணப்படுத்துபவர் (Healer), அல்லது குடும்பத் தலைவர். 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் அன்பே உருவானவராக வாழ்ந்தவர் நீங்கள். மற்றவர்களின் பசி, பிணி தீர்ப்பதில் உங்கள் காலத்தைக் கழித்திருப்பீர்கள். குடும்பத்திற்காகப் பல தியாகங்களைச் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள மறந்து போயிருப்பீர்கள். 

இந்த ஜென்மத்தின் பாடம்: மற்றவர்களுக்கு உதவி செய்யும் அதே வேளையில், உங்களது சுயமரியாதை, ஆரோக்கியம் மற்றும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 

மூல எண் 7 (பிறந்த திகதிகள்: 7, 16, 25) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: துறவி, ஜோதிடர், ரகசிய ஒற்றர் (Spy), அல்லது தியானி. 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் உலக வாழ்க்கையை வெறுத்து, ஆன்மீகம் மற்றும் பிரபஞ்ச ரகசியங்களைத் தேடிச் சென்றவர் நீங்கள். சமுதாயத்திலிருந்து விலகி, தனிமையில் அதிக காலம் வாழ்ந்திருப்பீர்கள். மற்றவர்களிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்திருக்க மாட்டீர்கள். 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்தில் உங்களுக்கு இயல்பாகவே ஆன்மீக நாட்டம் இருக்கும். ஆனால், சமுதாயத்தை விட்டு ஓடாமல், மனிதர்களோடு கலந்து வாழ்ந்து, உங்கள் ஞானத்தால் பிறருக்கு வழிகாட்ட வேண்டும். 

மூல எண் 8 (பிறந்த திகதிகள்: 8, 17, 26) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: பெரும் செல்வந்தர், நிலப்பிரபு, நீதிபதி, அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்தவர். 

விளக்கம்: கடந்த ஜென்மத்தில் பணமும், சொத்துக்களும் உங்களிடம் கொட்டிக் கிடந்தன. சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டும் இடத்தில் இருந்திருப்பீர்கள். ஆனால், பணத்தாசையினாலோ அல்லது அதிகார மமதையினாலோ சில ஏழைகளை ஏமாற்றியிருக்க அல்லது தண்டித்திருக்க வாய்ப்பு உண்டு. 

இந்த ஜென்மத்தின் பாடம்: இந்த ஜென்மத்தில் பணத்தின் மதிப்பை உணர்வீர்கள். கர்ம வினை உங்களை உன்னிப்பாகக் கவனிக்கும். எனவே, நேர்மையான வழியில் பணம் சம்பாதித்து, ஏழை எளியவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். 

மூல எண் 9 (பிறந்த திகதிகள்: 9, 18, 27) 

முன் ஜென்மத்தில் நீங்கள்: தியாகி, சுதந்திரப் போராட்ட வீரர், ஆன்மீக குரு, அல்லது சமூக சீர்திருத்தவாதி. 

விளக்கம்: நீங்கள் ஆன்ம பரிணாம வளர்ச்சியின் இறுதிப் படியில் இருக்கிறீர்கள் (9 என்பது எண்களின் முடிவு). கடந்த பல ஜென்மங்களின் அனுபவங்களை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். முன் ஜென்மத்தில் மனித குலத்தின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவராக நீங்கள் இருந்திருக்கலாம். 

இந்த ஜென்மத்தின் பாடம்: கடந்த கால கர்ம வினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் ஜென்மம் இது. எனவே, பழிவாங்கும் குணம், கோபம் ஆகியவற்றை விடுத்து, உலகளாவிய அன்பு மற்றும் பொதுநலத்தோடு வாழ வேண்டும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278