Header Logo
SLIC
உலகம்
நானும் பிரதமர் மோடியும் தான் மிக பிரபலமான ஜோடி!

Jun 17, 2026 - 11:49 AM

நானும் பிரதமர் மோடியும் தான் மிக பிரபலமான ஜோடி!
Mobitel Inner 1278
EDEX Inner

பிரான்ஸ் நாட்டின் எவியான் - லெஸ் - பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க G7 உச்சி மாநாடு நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். 

இம்மாநாட்டின் குழு புகைப்படத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

புகைப்படம் எடுப்பதற்கு முன்பாக இரு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது, சமூக ஊடகங்களில் தங்களுக்கு இருக்கும் பிரபலம் குறித்து பிரதமர் மோடி மெலோனியிடம் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. 

அதற்கு பதிலளித்த இத்தாலி பிரதமர் மெலோனி சிரித்தபடியே, "ஆமாம், நாம் தான் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஜோடி!" என்று கூறினார். 

இவர்களின் பெயர்களை இணைத்து இணையவாசிகளால் உருவாக்கப்பட்ட 'Melodi' என்ற ஹேஷ்டேக் மீண்டும் உலகளவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. 

கடந்த மே மாதம் பிரதமர் மோடி ரோம் நகருக்குச் சென்றிருந்தபோது, மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற 'பார்லே மெலோடி' மிட்டாய் பாக்கெட்டை பரிசாக வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து, மெலோனி தனது சமூக ஊடகப் பக்கத்தில், "பிரதமர் மோடி மிகவும் சுவையான மிட்டாயைப் பரிசாகக் கொண்டு வந்துள்ளார்" என்று ஒரு நெகிழ்ச்சியான வீடியோவையும் பதிவிட்டிருந்தார். 

அப்போது, மெலோனி பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து, "#Melodi குழுவிடம் இருந்து வணக்கம்" எனப் பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278