Header Logo

விளையாட்டு
பிரான்ஸ் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக புதிய சாதனை!

Jun 17, 2026 - 01:40 PM -

0

பிரான்ஸ் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக புதிய சாதனை!

கிலியன் எம்​பாப்​பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கிண்ண வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

அதுவும் கூடுதல் நேரத்தில் எம்​பாப்​பே அடித்த கோல் உண்மையில் பிரமிப்பூட்டும் கோல் என்பதோடு இந்த உலகக் கணிணத்தில் இதுவரையிலான கோல்களில் ஆகச்சிறந்தது என்ற வகையறாவைச் சேர்ந்ததானது. தனக்கு வந்த அருமையான கிராஸை 30 யார்டு தூரத்திலிருந்து கோல் வலை கிழிய அடித்த சக்தி வாய்ந்த ஷாட் மறக்க முடியாது மனதில் நெடுங்காலம் தங்கும் கோலாக அமைந்தது. 

நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியம் மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற உலகக் கோப்பை குரூப்-ஐ ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3 - 1 என்ற கணக்கில் செனகல் தேசிய கால்பந்து அணியை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடங்கியது. 

2018 உலகக் கிண்ணத்தை வென்று, 2022 தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணி இந்த தொடரிலும் கிண்ணத்தை வெல்லும் முக்கிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

எனினும் முதல் பாதியில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்பாப்பே முதல் பாதியில் வெறும் 14 முறை மட்டுமே பந்தை தொட்டார். பிரான்ஸ் அணியை விட செனகல் 5-1 என்ற கணக்கில் அதிக ஷாட்களை முயற்சித்தது. 

25 ஆவது நிமிடத்தில் செனகல் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு, கோல்கீப்பர் மைக் மெய்னான் காலில் பட்டு வெளியே சென்றது. 

ஆனால், 2 ஆவது பாதியில் பிரான்ஸ் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்தியது. 63 ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த துல்லியமான பாஸை எம்பாப்பே கோலாக மாற்றி அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். மாற்று வீரராக களமிறங்கிய பிராட்லி பார்கோலா 79 ஆவது நிமிடத்தில் செனகல் கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியை ஏமாற்றும் வகையில் பந்தை வலைக்குள் செலுத்தினார். பிரான்ஸ் முன்னிலையை 2 - 0 ஆக முன்னிலை பெற்றது. 

பின்னர் இப்ராஹிம் எம்பாயே செனகலுக்காக அடித்த கோல் வெறும் ஆறுதல் கோல் என்று கூற முடியாது, கொஞ்சம் தூரத்திலிருந்து வலையைத் தாக்கிய அவரது ஷாட் திகைப்பூட்டும் இன்னொரு ஷாட்தான் என்பதில் ஐயமில்லை. அட்டகாசமான கோல் இது. 

ஆனால், எல்லா கோல்களையும் இதுவரை இந்த உலகக் கிண்ணத்தில் அடித்த கோல்களையும் பின்னுக்குத் தள்ளிய கோலை எம்​பாப்​பே கூடுதல் நேரத்தில் அடித்தார். 30 யார்டுகள் தொலைவில் இருந்து பந்தை எடுத்துச் சென்று, அற்புதமான நீண்ட தூர ஷாட்டை மேல் மூலையில் செலுத்தி ஆட்டத்தின் சிறந்த கோல்களில் ஒன்றானது. 

இந்த இரண்டு கோல்களுடன் 27 வயதான எம்​பாப்​பே உலகக் கிண்ணத்தில் போட்டிகளில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தி, மேற்கு ஜெர்மனியின் ஜாம்பவான் கெர்ட் முல்லர் சாதனையை சமன் செய்தார். உலகக் கிண்ணத்தில் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். 

அதிக கோல் பதிவு செய்தவர்கள் வரிசையில் அவருக்கு முன்னால் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ், அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (தலா 16 கோல்கள்) மற்றும் பிரேசிலின் ரொனால்டோ நசாரியோ (15 கோல்கள்) உள்ளனர். இந்த சாதனையின் மூலம் அவர் பீலே மற்றும் பிரான்ஸ் ஜாம்பவான் ஜஸ்ட் ஃபொன்டெய்ன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளினார். 

மேலும், இந்த இரட்டை கோல்களால் பிரான்ஸ் அணிக்காக எம்​பாப்​பே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. இதன் மூலம் முன்னாள் ஒலிவியர் ஜிரூட் வைத்திருந்த சாதனையை முறியடித்து, பிரான்ஸ் அணியின் அதிக கோல் அடித்த வீரராக உயர்ந்தார்.


MOST READ

காணொளி
அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

title