Header Logo

சினிமா
கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Jun 17, 2026 - 01:48 PM -

0

கீர்த்தி சுரேஷின் சத்தியவான் சாவித்திரி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தற்போது அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம் விறுவிறுப்பாக உருவாகி, சமீபத்தில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்தது. 

படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் ஜூலை 24-ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வித்தியாசமான கதைக்களம் மற்றும் கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணி காரணமாக, இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

MOST READ

காணொளி
அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

title