Jun 17, 2026 - 02:29 PM -
0
சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனமானது இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் வாகன உதிரிப்பாக துறையில், நிறுவனத்தின் முன்னணி நிலையை உறுதிப்படுத்தும் முக்கிய அங்கீகாரமாக இலங்கையின் முதலாவது வாகன தொழில்துறை விருதுகள் நிகழ்வில் உதிரிப்பாக உற்பத்தியாளர் பிரிவில் சிறந்த டயர் உற்பத்தியாளர் விருதை பெற்றுள்ளது.
இலங்கை வாகனத்துறை பேரவையினால் (AIC) அலரி மாளிகை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தொழில்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வாகனத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். சிறப்புத் திறன், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் தேசிய அளவிலான தளமாக உருவாக்கப்பட்ட இந்த விருதுகள் தொழில்நுட்ப முன்னேற்றம், சந்தை தாக்கம், வாடிக்கையாளர் திருப்தி, மற்றும் தொழில்துறை தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் செயல்திறனை மதிப்பீடு செய்கின்றன.
இந்த அங்கீகாரமானது அசல் சாதன (OE) டயர் சந்தையில் சியெட் களனி பெற்றுள்ள ஆதிக்கமான நிலையை பிரதிபலிக்கிறது. இலங்கையில் பொருத்தப்படும் வாகனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றுக்கு தேவையான டயர்களை நிறுவனம் வழங்கி வருகிறது. 2012 ஆம் ஆண்டு தனது முதல் OE டயர் வழங்கலின் மூலம் உள்ளூர் வாகன உதிரிப்பாக துறையில் காலடி எடுத்து வைத்த சியெட் நிறுவனமானது மிகக் குறுகிய காலத்திலேயே வாகன உற்பத்தியாளர்களின் விருப்பமான டயர் பங்காளராக உருவெடுத்துள்ளது. தற்போது கார்கள், SUV-கள், மோட்டார் சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள், பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை வாகனங்களுக்கு ஆண்டுதோறும் 150000-க்கும் மேற்பட்ட OE டயர்களை நிறுவனம் வழங்கி வருகிறது.
இன்று உலகளாவிய 11 முன்னணி வர்த்தகநாமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டில் பொருத்தப்பட்ட வாகன மாதிரிகளில் சியெட் டயர்கள் அசல் உபகரணங்களாக பொருத்தப்படுகின்றன. இது நிறுவனத்தின் தயாரிப்பு தரம் தொடர்ச்சியான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் மீது வாகன உற்பத்தியாளர்கள் வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சியெட் டயர்கள் கடுமையான தரச் சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு நீடித்த பயன்பாடு, நிறுத்தத் திறன் பயண வசதி மற்றும், சத்தக் குறைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. குறைந்த உருளும் எதிர்ப்பு மற்றும் மிகக் குறைந்த அதிர்வு ஆகியவை ஓட்டுநர் திறனையும் பயனர் அனுபவத்தையும் மேலும் மேம்படுத்துகின்றன. இவை நவீன போக்குவரத்து தீர்வுகளுக்கான உலகளாவிய தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இணங்குகின்றன.
இந்த முக்கியமான நிகழ்வில் சிறந்த டயர் உற்பத்தியாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது இலங்கையின் வாகனத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சியெட் களனி வகிக்கும் முக்கிய பங்கையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப உலகத் தரத்திலான தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கான அதன் உறுதியான அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது.
பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.2 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைவதற்கு தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் திறன் ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடுகள் துணைபுரிகின்றன. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் பயணிகள் கார்கள், வேன்கள், SUVகள், வர்த்தக வாகனங்கள் (பயாஸ்-பிளை மற்றும் ரேடியல்), மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாய வாகனங்களுக்கான நியூமேடிக் டயர்கள் அடங்கும்.
சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு முன்பு, அடுத்த 18 மாதங்களுக்கு மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

