Jun 17, 2026 - 03:10 PM -
0
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (17) பிற்பகல் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

