Header Logo

சினிமா
"கருப்பு படத்தில் என் காட்சியை நீக்கியபோது..."

Jun 17, 2026 - 04:18 PM -

0

"கருப்பு படத்தில் என் காட்சியை நீக்கியபோது..."

ஆர்யா, ரெஜினா கசன்ட்ரா, இந்திரன் நடிப்பில் ஜெயன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் `ஆனந்தன் காடு'. ஆர்யா நாயகனாக நடித்துள்ள முதல் மலையாளப் படம் இது. இப்படம் ஜூன் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு கேரளாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆர்யாவிடம் இப்படத்தில் இந்திரன்ஸ் உடன் நடித்தது குறித்து கேட்கப்பட்டது. 

அதற்குப் பதில் சொன்னவர், "இந்திரன்ஸ் சாருக்கு இப்போது தமிழ்நாட்டில் பெரிய பெயர் கிடைத்துவிட்டது. இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறோம். விநியோகஸ்தர்கள் எல்லோரும் படத்தில் இந்திரன்ஸ் சார் இருப்பது தெரிந்ததும், போஸ்டரில் அவரது புகைப்படத்தைப் பெரியதாக போடச் சொல்கிறார்கள். அந்த அளவு அவர் பிரபலமாகிவிட்டார். 

அவருக்கு நல்ல டிமாண்ட் உருவாகி இருக்கிறது. தமிழ் ஆடியன்ஸுக்கு இந்திரன்ஸ் சாரை இன்னும் பார்க்க வேண்டும் என ஆசை உருவாகி உள்ளது. அவர், இந்தப் படத்தில் நடித்தது பெரிய ப்ளஸ். அவருடைய நடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது. தமிழிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 

’கருப்பு’ படத்தில் ஆர்யாவின் காட்சி நீக்கப்பட்டது குறித்து கேட்கப்பட, "ஒரு சின்ன பகுதியில்தான் நடித்தேன். ஆனால் கடைசியாக எடிட் செய்தபோது படத்தில் அது பொருத்தமாக இல்லை என்பதால் நீக்கிவிட்டனர். ஆனால், அதனை நீக்கும் முன்பு இயக்குநர் பாலாஜி என்னை அழைத்து `அது வேண்டாம், நாம் அடுத்து ஏதாவது படத்தில் முயற்சிக்கலாம்' எனக் கூறினார். அந்தப் படத்தில் சின்ன பரிசோதனை முயற்சி செய்தார். 

ஆனால் ஒரு படமாக பார்க்கையில், ’இது பொருத்தமாக இல்லை’ என்றார். ’உங்களுக்கு அது வேண்டாம் என தோன்றினால், அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை’ என நான் கூறினேன்" என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

title