Jun 17, 2026 - 04:30 PM -
0
கண்டி - தெல்தெனிய பகுதியில் காரில் இருந்து பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெல்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை ஆள் அடையாளம் காணப்படவில்லை தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் சற்றுநேரத்தில் நீதவான் பரிசோதனை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

