Jun 17, 2026 - 05:29 PM -
0
'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த மலையக ரயில் மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான பயணிகள் ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஹட்டனில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையில் உள்ள குறைபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று (17) சென்ற போதே, இந்த தகவலை வெளியிட்டார்.
தற்போது மலையக ரயில் போக்குவரத்து பதுளை மற்றும் அம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளது.
புயலினால் சேதமடைந்த ரயில் பாதையின் ஏனைய பகுதிகளை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் தற்போது மிகவும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி குறிப்பிட்டார்.
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நாவலப்பிட்டியவிலிருந்து பதுளை வரையில் ரயில் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

