Header Logo

விளையாட்டு
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 402 ஓட்டங்களை குவித்தது இந்தியா!

Jun 17, 2026 - 05:48 PM -

0

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 402 ஓட்டங்களை குவித்தது இந்தியா!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2 ஆவது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று (17) நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

3 ஆவது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் அதிரடியில் இறங்கியது. 

பொறுப்புடன் ஆடிய இந்திய அணி தலைவர் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இது அவரது 9 ஆவது சதமாகும். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் சதமடித்து 125 ஓட்டங்களை எடுத்தார். சுப்மன் கில் - இஷான் கிஷன் ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 224 ஓட்டங்களை சேர்த்தது. 

சதமடித்து அசத்திய சுப்மன் கில் 154 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 49.5 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 402 ஓட்டங்களை பெற்று கொண்டது. 

ஆப்கானிஸ்தான் சார்பில் கரோட்டே 4 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title