Header Logo

செய்திகள்
வருட இறுதியில் டெங்கு தீவிர நிலையை எட்டும் அபாயம்

Jun 17, 2026 - 06:02 PM -

0

வருட இறுதியில் டெங்கு  தீவிர நிலையை எட்டும் அபாயம்

டெங்கு நோய் பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அபாய கட்டத்தை எட்டும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

'BIG FOCUS'நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் மாதம் முதல் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் 5,600 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 8,500 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் அனில் ஜாசிங்க, 

பொதுவாக டெங்கு நோய் சில வருடங்களுக்கு ஒருமுறை அதி-தொற்று நிலையை அடையும் ஒரு தன்மையே வரலாற்றில் காணப்படுகிறது. 

இதில் ஆகக்கூடிய சிவப்புப் புள்ளி 2017 இல் பதிவாகியுள்ளது. இவ்வருட வரைபடத்தில் நீல நிறப் புள்ளி மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

இதனை நாம் குறைக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த நேரத்தில் நாம் விழிப்புடன் செயற்படுவது மிகவும் முக்கியமானது. 

வருடம் முழுவதும் இவ்வாறான செயல்பாடுகள் முக்கியமாகும். காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப இது மாறுபடலாம் எனத் தெரிவித்தார்.

MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title