Header Logo

செய்திகள்
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி

Jun 17, 2026 - 09:37 PM -

0

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 402 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சுப்மன் கில் 154 ஓட்டங்களையும், இஷன் கிஷன் 125 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நங்கியாலாய் கரோட்டி 4 விக்கெட்டுக்களையும், ரசிட் கான் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இந்நிலையில் 403 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரஹ்மத் ஷா 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். 

பந்துவீச்சில் அர்ஷ்தீப் ஷிங் மற்றும் குர்நூர் பரார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title