Header Logo
SLIC
பல்சுவை
CCTV வைத்து மனைவியை 24 மணி நேரமும் கண்காணித்த கணவன்!

Jun 19, 2026 - 02:16 PM

CCTV வைத்து மனைவியை 24 மணி நேரமும் கண்காணித்த கணவன்!
Mobitel Inner 1278
EDEX Inner

நடத்தை சந்தேகத்தால் வீட்டுக்குள் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்ததால் விரக்தி அடைந்த புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

மும்பை அருகே உள்ள தானேயை அடுத்த அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் நிதின்தில்கர். வைத்தியர்  இவருக்கும், விசாகா (வயது26) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. 

திருமணமான சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு விசாகாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் உடல் அளவிலும், மனதளவிலும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், விசாகா தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் விசாகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை அனுப்பிவைத்தனர். 

இதற்கிடையே தனது மகள் கணவர் வீட்டினரின் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக விசாகாவின் பெற்றோர் சிவாஜி நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகார் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதாவது வைத்தியர் நிதின் தில்கர், தனது மனைவி விசாகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவரது ஒவ்வொரு அசைவையும், நடமாட்டத்தையும் கண்காணிப்பதற்காக வீட்டின் உள்ளேயும், வெளியேயும் இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார். விசாகா யாரிடம் பேசுகிறார்? என்ன செய்கிறார்? என்பதை இந்த கேமராக்கள் மூலம் அவர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டின் எல்லையை தாண்டி விசாகா அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக பேசினால் கூட, அவரை மிருகத்தனமாக கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். புகுந்த வீட்டில் நரக வேதனையை அனுபவித்த விசாகா, இந்த துயரத்தை தனது தாயிடம் போனில் கூறி கதறி அழுதுள்ளார். 

மகளின் நிலையை கேட்டு பதறிய பெற்றோர், நேரில் வந்து அவரை மீட்டு செல்வதற்குள்ளாகவே, விசாகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வைத்தியர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகிய 3 பேரையும் பொலிஸார் நேற்று (18) கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வைத்தியர் கணவரின் விபரீத புத்தியால், திருமணமான 47 நாட்களில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278