Jun 19, 2026 - 04:30 PM -
0
நீதி அமைச்சர் செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணியில் இன்று (19) மாலை போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் செம்மணியில் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
--

