Header Logo

செய்திகள்
கண்டியில் இளம் பெண் கொலையா? தற்கொலையா?

Jun 20, 2026 - 05:05 PM -

0

கண்டியில் இளம் பெண் கொலையா?  தற்கொலையா?

கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார்.


கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


எவ்வாறாயினும், தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்ததாகவும், பின்னர் அந்த கயிற்றை அறுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.


இவர்கள் திருமணமாகி சுமார் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையான கணவர் தனக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்திய துன்புறுத்தல்கள் தொடர்பாக பலகொல்ல பொலிஸில் பலமுறை முறைப்பாடு செய்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


கணவர் தன்னைத் தாக்குவதன் காரணமாக அவர் அடிக்கடி தனது பெற்றோரின் வீட்டிற்கு வருவதாகவும், அவர் விவாகரத்து செய்யத் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.


இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை இளைஞனின் வீட்டாரால் பொலிஸாரிடமும் நீதவானிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த தங்கள் மகளினுடையது அல்ல என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இச்சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண்ணின் தரப்பினர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.


இதன்படி, பெண்ணின் சடலத்தைப் பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title