Header Logo

செய்திகள்
மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

Jun 20, 2026 - 10:28 PM -

0

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை, தும்பாலை பகுதியிலுள்ள வயலொன்றில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வயல் நிலப் பாதுகாப்பிற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார், மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த வயலின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அத்துடன், உயிரிழந்த யானையின் உடலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

--

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

title