Header Logo

விளையாட்டு
இனி MI இல்லை? மாறும் ஹர்திக்!

Jun 26, 2026 - 01:38 PM -

0

இனி MI இல்லை? மாறும் ஹர்திக்!

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தலைவர் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு மாற்றிக்கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆவது இடத்தை மட்டுமே பிடித்தது. தவிர, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை அணிக்கு திரும்பிய பிறகு, பாண்டியாவின் தலைமையில் மும்பை அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறத் தவறியுள்ளது. 

இதனால், அவர் மீது தொடர்ந்து அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக அணியில் சில மாற்றங்களையும் செய்யவிருப்பதாக மும்பை அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில்தான், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, ஹர்திக் பாண்டியாவை டிரேடு முறையில் தங்கள் அணிக்கு மாற்றிக்கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த வர்த்தகம் தொடர்பாக இரு அணிகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஒருவேளை, ஹர்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைய நேர்ந்தால், அவருக்கு அவ்வணியின் அணி தலைவர் பொறுப்பை ஏற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இதுதொடர்பாக இரு அணிகளும் கடந்த சீசனின் இறுதியிலேயே பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நெருங்கிக்கொண்டிருந்ததால் அது கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில்தான் தற்போது இவ்விரு அணிகளும் இதுதொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியாவை வாங்க முயற்சி செய்வதாகவும், எனினும் கொல்கத்தா அணியின் தீவிரத்தால் அது பின்தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!