Header Logo

விளையாட்டு
உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது இந்தியா!

Jun 29, 2026 - 12:49 PM -

0

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது இந்தியா!

பெண்களுக்கான 10 ஆவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 

இந்த போட்டித்தொடரில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குரூப் 1 பிரிவில் லண்டன் லார்ட்சில், இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இதில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களை சேர்த்தது. 

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் 56 ஓட்டங்களை பெற்று கொடுத்தார். 

171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெர்ரி 56 ஓட்டங்களையும், கார்ட்னர் 53 ஓட்டங்களை பெற்று கொண்டனர். 

இந்தத் தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது இந்தியா.

MOST READ

காணொளி
இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!