Header Logo
SLIC
பல்சுவை
சிறுமி பாலியல் கொலை - முதியவருக்கு தூக்கு தண்டனை!

Jun 29, 2026 - 05:56 PM

சிறுமி பாலியல் கொலை - முதியவருக்கு தூக்கு தண்டனை!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில், 3 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. 

புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் கிராமத்தில், கடந்த மே 1 ஆம் திகதி சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த ஊரை சேர்ந்த பீம்ராவ் காம்ப்ளே என்ற 65 வயதான முதியவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை பேசி பக்கத்தில் உள்ள ஒரு மாட்டுத்தொழுவத்திற்கு கடத்தி சென்றுள்ளார். 

அங்கே சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கற்களால் அடித்துக் கொலையும் செய்துள்ளார். 

காணாமல் போன சிறுமியைத் தேடி அலைந்த பெற்றோருக்கு, தொழுவத்தில் சிறுமி பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கொடூர சம்பவம் புனே முழுவதும் தெரியவந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கக்கோரி, வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே பொலிஸார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். 

இந்த வழக்கு சிறப்பு 'ஃபாஸ்ட் டிராக்' நீதிமன்றத்தில் அதிவேகமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த மே 28 ஆம் திகதி குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 20 ஆம் திகதி இருதரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. 

சிசிடிவி காட்சிகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளி என நீதிமன்றம் ஜூன் 25 ஆம் திகதி அறிவித்தது. 

பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் ஹிம்மத்ராவ் சூர்யவன்ஷி வாதாடுகையில், "குற்றவாளிக்கு வயது 65 ஆகிவிட்டது, சமூகத்தால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கோரினார். 

அரசு தரப்பு வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது மற்றும் குற்றத்தின் கொடூரத் தன்மையை சுட்டிக்காட்டி தூக்கு தண்டனை மட்டுமே இதற்கு சரியான தீர்ப்பு என்று வாதிட்டார். 

வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்தக் குற்றவாளி ஏற்கனவே இரு வழக்குகளில் இருந்து தப்பித்ததாகவும், குற்றவாளியிடம் எந்த ஒரு குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ இல்லை என்றும், இவர் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் கூறினார். 

எனவே, அறியவற்றில் அறிய வழக்காக இதனை கருதி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்தார்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278