Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (01.07.2026)!

Jul 1, 2026 - 09:28 AM

இன்றைய ராசிப்பலன் (01.07.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (01) மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று புதனின் அருள் கிடைக்கும் நாள். கடகத்தில் குரு உச்சம் பெற்று - சுக்ரன் மற்றும் புதனுடன் சேர்ந்துள்ளார். மகரத்தில் சந்திரன் இருப்பதால் இன்று கஜகேசரி யோகம் உருவாகிறது. இன்று ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சவாலான நாளாக அமையும். மகர ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன் உங்களுக்குப் பல பொறுப்புகளை அளிப்பார். இன்று உங்களுடைய செலவுகளை திட்டமிட்டு செய்யவும். முக்கியமான வேலைகளை முடிக்கும் முன் இருமுறை சரி பார்க்கவும். செவ்வாய் கிரகம் சுறுசுறுப்பு மற்றும் கடின உழைப்பின் காரணியாக இருப்பதால், ஒழுங்கைப் பராமரிப்பதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் உங்கள் திறன் இன்று உங்களுக்குப் புகழைத் தேடித்தரும்.​ 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், மகிழ்ச்சியைத் தருவார். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். முக்கிய வேலைகளை திட்டமிடுவது அவசியம். இந்நாள் மங்களகரமானதாக அமையும். அரசியல் ரீதியான எதிரிகள் இன்று உங்களுக்கு தொந்தரவு தர முயற்சிக்கலாம். வெற்றியை நோக்கிய மெதுவான நகர்வுகள் சாத்தியம் என்றாலும், புதிய முயற்சிகளைத் தொடங்க இது ஏற்ற நேரமல்ல. அன்றாடப் பணிகளை விரைவாக முடித்துவிட்டு, மாலையில் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும். எந்தவித ஆடம்பரமான செயல்கள் அல்லது செலவுகளில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும், உயிரினம் அது தலைக்கனமாக மாறாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் ராசிக்குரிய புதன் கிரகம், செல்வம் மற்றும் புகழுக்குரிய இரண்டாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்துள்ளது; இது அறிவுசார் மற்றும் தொழில் துறைகளில் வெற்றியைத் தரும். உங்கள் குழந்தைகளிடமிருந்து வரும் மகிழ்ச்சியான செய்திகள் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். இது நற்பலன்கள் நிறைந்த நாள் என்பதால் விழிப்புடன் செயல்படுங்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான செயல்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நன்மை பயப்பதாக அமையும். இன்று பணியிடத்தில் குழு விவாதங்களில் சிறப்பாக பங்களிப்பீர்கள். நிதிநிலை சாதகமாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். சமூகத் தொடர்புகள் அதிகரிப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் ராசிக்குரிய சந்திரன் மீன ராசியில் இருப்பதால், தாழ்ந்த சாதி அல்லது வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரால் உங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணையாக இருக்கும். இருப்பினும் புதிய விஷயங்களில் முழுமையான தகவல்களை சேகரித்து பின்னர் அதை செயல்படுத்த தொடங்குவது நல்லது. உங்கள் எதிரிகளின் சதித்திட்டங்கள் தோல்வியடையும். உலகியல் இன்பங்களுக்காகச் செய்யப்படும் மங்களகரமான செலவுகள் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட கால மனக்கசப்புகள் பரஸ்பர புரிதல் மூலம் தீர்க்கப்படும். ஒரு புதிய அறிமுகம் நட்பாக மாறக்கூடும்.புதிய சேமிப்பா அல்லது காப்பீடு விஷயங்களை பரிசீலனை செய்வீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான புதன், தனது சொந்த வீடான பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுடைய செல்வநிலை சிறப்பாக உயரும். உங்களுடைய புத்திசாலித்தனம் முக்கிய வேலைகளை முடிப்பதற்கு கை கொடுக்கும். சமூகத் தொண்டு, ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவதில் உங்கள் மனம் மகிழ்ச்சியடையும். எதிரிகளுக்கு சவால் விடும் விதத்தில் உங்களுடைய செயல்கள் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக அமையும். உங்களுடைய தொழிலை மேம்படுத்தும் விதத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்குரிய சுக்கிரன் இன்று லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும், மற்ற கிரகங்களின் பார்வை மற்றும் அமைப்பு சாதகமற்றதாக இருப்பதால், நீங்கள் எந்த ஊர் முயற்சிகளை எடுத்தாலும், அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்க தாமதம் ஏற்படும். வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். மறைமுக எதிரிகள் செயல்படுவதால் தேவையற்ற அலைச்சலும் குடும்பத்தில் சலசலப்பும் ஏற்படலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஓரளவு நிம்மதி கிடைக்கும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியின் மீது சனியின் தாக்கம் மற்றும் மகர ராசியில் சந்திரனின் சஞ்சாரம் காரணமாக இன்று சவாலான நாளாக அமையும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். ஒரு முக்கியமான வணிக ஒப்பந்தம் உங்களுக்குச் சாதகமாக முடிவாகலாம். உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் சரியாக எடுத்துரைப்பதில் வெற்றி பெற்றால், வரும் நாட்களில் உங்கள் மேலதிகாரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். இன்று பொறுமையுடன் செயல்படுவது உங்களுடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். 

தனுசு ராசி பலன் ராசி 

தனுசு அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று இருப்பதும், சந்திரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி, வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுடைய மனைவி மற்றும் நண்பர்கள் மூலம் பண வரவு கிடைக்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளை வெல்ல முடியும். இன்று உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய சிறப்பான அணுகுமுறை உங்கள் மீதான நம்பகத்தன்மையை வலுப்படுத்தும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு ராசியின் அதிபதியான சனி இந்த ஏரியா ஸ்தானத்தில் சஞ்சரிப்பதன் காரணமாக, அன்றாட வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை வேகமாக எடுப்பீர்கள். சில பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று சொத்து தொடர்பான பிரச்சனைகளை தீரலாம். உங்களுடைய உடல் நலனில் குறைபாடு ஏற்படலாம். சிறிய விஷயங்களை கூட மிகவும் கவனமாக செய்து முடிக்க முயற்சிக்கவும். பணம் சார்ந்த விஷயத்தில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம். புதிய வருமான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தராது. 

கும்ப ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதி சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், இன்று உங்களுடைய பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். குடும்ப உறவினர்களை அனுசரித்து செல்லவும். இன்று ஏதேனும் ஒரு விதத்தில் உங்களுக்கு பணம் வந்து சேர வாய்ப்புகள் உண்டு. ஒரு வயதான நபர்களின் ஆலோசனையும் ஆசீர்வாதமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். இன்று பணியிடத்தில் நேர்மறையான சூழலை பராமரிக்க முயலும். குழுவாக பணியாற்றுவது நல்லது. 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் புதிய வருமான வழிகள் உருவாகும். எதிர்ப்புகள் முறியடிக்கப்படும். உங்கள் அதிர்ஷ்டம் மீண்டும் பிரகாசிக்கும். தொழிலில் அதிக முதலீடு செய்வது நன்மை பயக்கும். உங்களுடைய தினம் வருவாய் சரியான விதத்தில் எதிர்காலத்திற்கான முதலீடாக மாற்றுவதற்கு திட்டமிடமும். இன்று யாருக்கும் நிதி ஆலோசனை வழங்க வேண்டாம். ஏதேனும் ஒரு ஒப்பந்தம் அல்லது பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனமாக இருக்கவும். புதிய பணிகளை தொடங்குவதற்கு முன் நிறுவையில் உள்ள பணிகளை முடிக்கப்பட்டுள்ளது என சரி பார்க்கவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278