Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
உங்க உதடு கருப்பா இருக்கா?

Jul 2, 2026 - 12:02 PM

உங்க உதடு கருப்பா இருக்கா?
Mobitel Inner 1278

தற்கால வாழ்க்கைமுறை மாற்றம், போதிய நீர்ச்சத்து இன்மை மற்றும் தரமற்ற அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு காரணமாகப் பலருக்கும் உதடுகள் தங்களின் இயற்கையான பொலிவை இழந்து கருமையாக மாறும் சிக்கல் ஏற்படுகிறது. 

இந்தச் சிக்கலைக் களைந்து, உதடுகளை ஆரோக்கியமாகவும் இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்திலும் பராமரிப்பதற்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. 

உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவது கருமையை குறைப்பதற்காக, ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் சிறிதளவு தேன் கலந்து, உதடுகளின் மேல் மென்மையாக 2 நிமிடங்கள் தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். 

பீட்ரூட்டில் இயற்கையாகவே உள்ள நிறமிகள் உதடுகளுக்குப் பொலிவைத் தரக்கூடியவை. பீட்ரூட்டின் சிறிய துண்டை எடுத்து உதடுகளில் நேரடியாகத் தேய்க்கலாம் அல்லது அதன் சாற்றை இரவு தூங்கும் போது தடவிக்கொண்டு தூங்கலாம். இது உதட்டின் கருமையைப் படிப்படியாகக் குறைக்கும். 

எலுமிச்சை சாற்றுடன் சம அளவு கிளிசரின் கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி உதட்டில் தடவி மசாஜ் செய்து வந்தால் காபி மற்றும் டீ குடிப்பதால் ஏற்படும் உதட்டின் கறைகள் மறையும். எலுமிச்சம்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் இயற்கையான வெளுப்பானாக செயல்படுகிறது. 

உதடுகள் வறண்டு போவதைத் தடுக்க இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சில துளிகள் பாதாம் எண்ணெய் அல்லது தூய்மையான நெய்யை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது உதடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். 

உதடுகள் வறளும் போது எச்சிலால் அதனை ஈரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் உதடுகளை மேலும் கருமையாக்கும். எனவே, தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதே உதடுகளின் ஆரோக்கியத்திற்குச் சிறந்த வழியாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278