Header Logo

சினிமா
அமெரிக்காவில் கிரிக்கெட் ஸ்டேடியம் திறந்த ஷாருக்கான்!

Jul 3, 2026 - 12:06 PM -

0

அமெரிக்காவில் கிரிக்கெட் ஸ்டேடியம் திறந்த ஷாருக்கான்!

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ஷாருக்கான், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். 

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஷாருக்கான், என்னுடைய வாழ்க்கையிலும் பல அவமானங்களை சந்தித்துள்ளேன். அவற்றில் சில இன்றும் ஆறாத காயங்களாக மனதில் இருக்கிறது. 

ஆனால் அந்த அவமாங்களே வெற்றிக்கான வெகுமதியாக மாறும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டான சூழலில் மனம் தளராமல் மீண்டும் எழுந்து ஓட வேண்டும். தேடலும் முயற்சியும் இருக்கும் வரை வெற்றியை நோக்கிய பயணமும் தொடரும் என மனம் திறந்து பேசியிருந்தார். 

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டியில் தன்னுடைய புதிய கனவை தொடங்கியுள்ளார். அதாவது தன்னுடைய சொந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டியுள்ளார். அந்த மைதானத்திற்கு Knight Riders Cricket Ground என்று பெயர் வைத்துள்ளார். 

சுமார் 175 கோடி ரூபாவுக்கும் அதிகமான செலவில் இந்த மைதானத்தை ஷாருக்கான் கட்டி முடித்துள்ளார். மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2026 மதிப்பின்படி ஷாருக்கானின் சொத்து மதிப்பு சுமார் 12, 490 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!