Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
300 மி.மீ-ஐத் தாண்டிய மழை! மழை தொடர்ந்தால் ஆபத்து

Sep 21, 2026 - 01:07 PM

300 மி.மீ-ஐத் தாண்டிய மழை! மழை தொடர்ந்தால் ஆபத்து
Mobitel Inner 1278

நிலவும் அதிக மழைவீழ்ச்சியுடன் இதுவரை சுமார் 35 சிறிய நில சீர்குலைவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. 

இன்றைய (21) 'BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி இமாயா ஆரியரத்ன, அச்சம்பவங்கள் சிறிய அளவிலானவை என்றபோதிலும், நிலவும் மழைவீழ்ச்சிக்கு மத்தியில் அவை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். 

கடந்த மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி 300 மில்லிமீற்றரைத் தாண்டியுள்ளதுடன், இம்மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் தொடருமானால் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல், நிலம் தாழிறக்கம் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற நில சீர்குலைவு அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதுவரை பாரிய அளவிலான நில சீர்குலைவு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன், சிறிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போது மண்சரிவு அபாயம் கொண்ட 14 மாவட்டங்கள் காணப்படுவதுடன், அவற்றில் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மழைவீழ்ச்சியின் தீவிரத்தன்மை மேலும் அதிகரித்தால், மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் எனச் சிரேஷ்ட புவியியலாளர் சுட்டிக்காட்டினார். 

மண்சரிவு எச்சரிக்கைகள் பிராந்திய ரீதியாக வெளியிடப்படுவதால், தத்தமது பகுதிக்குரிய எச்சரிக்கைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 

குறிப்பாக, இதற்கு முன்னர் பிரதேச செயலகங்கள் ஊடாக அபாயகரமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் அவ்வறிவுறுத்தல்களுக்கு அமைவாக உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278