Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
அனோஜனின் விடுதலைக்காக உச்சபட்ச முயற்சி! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

Sep 21, 2026 - 01:47 PM

அனோஜனின் விடுதலைக்காக  உச்சபட்ச முயற்சி! எதிர்க்கட்சித் தலைவர் உறுதி
Mobitel Inner 1278

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர். 

இச்சந்திப்பில் சிவராசா அனோஜனின் தந்தையான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரரான சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இவர்களுடனான கலந்துரையாடலின் போது, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட எதிர்க்கட்சித் தலைவர், சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்தார். 

அத்துடன், சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடனும் தொலைபேசி வழியாகப் பேசி நிலமைகளைக் கேட்டறிந்த அவர், பின்னர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரைத் தொடர்புகொண்டு, அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்தார். 

சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காகச் செய்யக்கூடிய உச்சபட்ச முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வதாக அவரது பெற்றோரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278