Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
கண்டி நகரில் புதிய BAIC காட்சியறையை திறந்துள்ள David Pieris Automobiles

Sep 21, 2026 - 01:27 PM

கண்டி நகரில் புதிய BAIC காட்சியறையை திறந்துள்ள David Pieris Automobiles
Mobitel Inner 1278

டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகனப் பிரிவான 'David Pieris Automobiles (Private) Limited (DPA), கண்டி நகரில் புதிய காட்சியறையைத் திறந்து வைத்ததன் மூலம், தனது BAIC தமது காட்சியறை வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. 

இலக்கம் 262A, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய காட்சியறையானது, நவீன BAIC வாகனங்களின் தெரிவுகளை கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக அருகிலேயே கொண்டு சேர்ப்பதன் மூலம், இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துகிறது. 

நவீனத்துவம், அதிக சிறப்பம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகியவற்றிற்கான அதிகரித்து வரும் கேள்வி காரணமாக, நாடு முழுவதும் BAIC வாகனங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான DPA நிறுவனத்தின் முயற்சிகளில் இந்தத் திறப்பு விழாவானது மற்றுமொரு முக்கிய படியாகும். 

பன்னிபிட்டிய வீதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள BAIC இன் முதன்மைச் காட்சியறை மற்றும் கொழும்பு 02 ஹைட் பார்க் கோணர், குருணாகல், மாத்தறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள அதன் காட்சியறைகளின் வலையமைப்புடன் கண்டியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய காட்சியறை இணைகிறது. விரிவடைந்து வரும் இவ்வலையமைப்பானது, முக்கிய பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் BAIC இன் வாகனத் தெரிவுகளை வசதியாக ஆராய்ந்து அறிவதற்கும் விற்பனை தொடர்பான தொழில்முறை ரீதியான உதவிகளைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. 

அதிகரித்து வரும் BAIC வாகனங்களின் தெரிவு 

David Pieris Automobiles நிறுவனம் தற்போது இலங்கையில் மூன்று BAIC வாகன மாதிரிகளை சந்தைப்படுத்தி வருவதன் மூலம் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறது. 

இவ்வாகன வகைகளில், வடிவமைப்பு, செயல் திறன், தொழில்நுட்பம், நடைமுறை ரீதியான பயன்பாடு ஆகியவற்றின் கலவையை நவீன SUV மாதிரியான BAIC X55 வழங்குகின்றது. பன்முகத்தன்மை மற்றும் உறுதியான வாகனம் செலுத்தும் அனுபவத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான SUV மாதிரியாக BAIC BJ30 விளங்குகிறது. எதிர்காலத்திற்கேற்ற நிலைபேறான போக்குவரத்து பயன்பாட்டிற்கான BAIC இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் அங்கசம்பூரணமான மின்சார வாகனமாக BAIC X3e அமைகிறது. 

விரிவடைந்து வரும் காட்சியறை வலையமைப்பின் மூலம் இந்த வாகன மாதிரிகள் கிடைப்பதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு BAIC வர்த்தகநாமத்தின் அதிநவீன வாகனத் தொழில்நுட்பங்களை அனுபவிக்கவும், தங்களது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வாகனங்களை தெரிவு செய்யவும் வாய்ப்புகளை வழங்குகிறது. 

விற்பனைக்கு பிந்தைய ஆதரவை வலுப்படுத்தல் 

தமது காட்சியறைகளின் இருப்பை மேலும் அதிகரிப்பதன் ஊடாக, விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வலுப்படுத்துவதன் மூலம், BAIC இன் விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை DPA நிறுவனம் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகன பயன்பாட்டுப் பயணம் முழுவதிலும் நம்பகமான ஆதரவை வழங்குகிறது. 

கொழும்பு ஹைட் பார்க் கோணரில் உள்ள பிரத்தியேக BAIC சேவை மையத்தின் மூலம், BAIC இன் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் கிடைக்கப்பெறுவதோடு, நாடளாவிய விநியோகஸ்தர் வலையமைப்பின் ஆதரலும் கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகனப் பராமரிப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய உதவிகளை வசதியாகப் பெறுவதற்காக சேவை உட்கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட்டு, நிறுவப்பட்டுள்ளன. 

BAIC காட்சியறை மற்றும் சேவை வலையமைப்பின் இந்த விரிவாக்கமானது, டேவிட் பீரிஸ் குழுமத்தின் நிபுணத்துவம் மற்றும் அதன் நாடளாவிய இருப்பின் ஆதரவுடன், முழுமையான வாகன உரிமையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான DPA இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. 

கண்டி காட்சியறையின் திறப்புடன், மத்திய மாகாணத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது BAIC வாகனங்களின் பயன்பாட்டை அனுபவிக்க முடியும் என்பதுடன், தமது வீட்டிற்கு அருகிலேயே விற்பனை தொடர்பான பிரத்தியேக உதவிகளையும் பெற முடியும். இது இலங்கையில் இவ்வர்த்தகநாமத்தின் மேம்பட்டு வரும் தடத்தை மேலும் வலுப்படுத்துகிறது. 

மேலதிக விபரங்களுக்கு, 0114 700678 ஊடாக BAIC நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது www.baicsrilanka.com/ மற்றும் BAIC Sri Lanka பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடவும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

Mobitel 1278