Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ஜனசக்தி லைஃப்பின் Title அனுசரணையில் Janashakthi Life - ICA சர்வதேச அரை மரதன் 2026 மீண்டும் நடைபெறுகிறது

Sep 21, 2026 - 11:56 AM

ஜனசக்தி லைஃப்பின் Title அனுசரணையில் Janashakthi Life - ICA சர்வதேச அரை மரதன் 2026 மீண்டும் நடைபெறுகிறது
Mobitel Inner 1278

JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life - ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும் சர்வதேச ஓட்டப்பந்தய வீரர்கள், நிறுவன அணிகள் மற்றும் உடற்பயிற்சி சமூகங்களை ஒன்றிணைத்து, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறைகள், பங்கேற்பு மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கும் தளத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிகழ்வு விருந்தோம்பல், விற்பனை, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளில் தாக்கத்தை உருவாக்கும் அதே வேளை இலங்கையின் வளர்ந்து வரும் விளையாட்டு சுற்றுலா முன்மொழிவை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத் தொடர்ச்சியான கூட்டாண்மையானது, சமூகங்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்கும் ஜனசக்தி லைஃப் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந் நிகழ்வானது, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஓட்டப்போட்டி அனுபவத்தை வழங்குவதோடு, நிறுவன மற்றும் தனிநபர் பங்கேற்புக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வின் வருமானம், பாடசாலைகள் மற்றும் அனாதை இல்லங்களுக்கான சுத்தமான நீர் வழங்கல் முயற்சி உட்பட, நிலையான சமூக முன்னேற்றங்களிற்காக பயன்பட்டது. இந்த முன்முயற்சியின் கீழ், நாடளாவிய ரீதியில் வசதிகள் குறைந்த பாடசாலைகள் மற்றும் அனாதை இல்லங்களில் நிறுவுவதற்காக 54 Reverse Osmosis நீர் சுத்திகரிப்பு அலகுகளை ICA கொள்வனவு செய்துள்ளது. இதில் ஜனசக்தி லைஃப் ஐந்து அலகுகளுக்கு பங்களித்தது. 

Title அனுசரணையாளராக, ஜனசக்தி லைஃப் நல்வாழ்வு, பங்கேற்பு மற்றும் பகிர்ந்த அனுபவங்களை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இது நிதிப்பாதுகாப்பிற்கு அப்பால் சமூகங்களுக்கு நன்மையான பங்களிப்பை வழங்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM


காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278