Sep 21, 2026 - 11:51 AM

காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தகநாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், வாடிக்கையாளர் அனுபவங்களை உயர்த்துவதற்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்குமான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக தனது தங்காலை கிளையை, இல. 2/1, கடற்கரை வீதி, தங்காலை என்ற புதிய, எளிதில் அணுகக்கூடிய முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட கிளை, அதிக சௌகரியம், மேம்பட்ட அணுகல் மற்றும் மிகவும் வரவேற்கத்தக்க சூழலை வழங்குவதால் ஜனசக்தி லைஃப் தனது தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவை அனுபவத்தை திறம்பட வழங்க முடிகிறது.
இந்த இடமாற்றம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கும், அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கு இடமளிப்பதற்கும், அதன் சேவைகளை எளிதாக அணுகுவதற்குமான தொடர்புப் புள்ளிகளை உருவாக்குவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
புதிய முகவரியின் ஊடாக ஜனசக்தி லைஃப் தங்காலையில் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு வாடிக்கையாளர்கள் நம்பகமான மற்றும் தரமான சேவையையும் ஆதரவையும் பெறுவதை உறுதி செய்கிறது.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.





























