Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
புதிய அலுவலகத் திறப்பு, Gallery HR இன் உலகளாவிய விரிவாக்க பயணத்தின் அறிவிப்பு மூலம் தனது 6ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் Soft Gallery

Sep 21, 2026 - 11:35 AM

புதிய அலுவலகத் திறப்பு, Gallery HR இன் உலகளாவிய விரிவாக்க பயணத்தின் அறிவிப்பு மூலம் தனது 6ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் Soft Gallery
Mobitel Inner 1278

தனது வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான Soft Gallery (Pvt) Ltd தனது ஆறாவது ஆண்டு நிறைவை, தனது நவீன புதிய அலுவலக வளாகத்தை அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததன் மூலம் கொண்டாடியது. வெறுமனே ஒரு கட்டட விரிவாக்கமாக மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு (AI), அறிவார்ந்த தன்னியக்க செயற்பாடு, மேம்பட்ட மனிதவள பகுப்பாய்வு மற்றும் உலகளாவிய சந்தை விரிவாக்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான முதலீடுகள் மூலம், தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிறுவனம் மாறியுள்ளதை இந்நகர்வு எடுத்துக் காட்டுகிறது. 

நம்பகத்தன்மை, நெகிழ்வுத்தன்மை, பயனுள்ள நிறுவன தொழில்நுட்பத்தை உருவாக்குதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஆரம்பிக்ககப்பட்ட Soft Gallery, ஒரு இலக்கு சார்ந்த மென்பொருள் முயற்சியிலிருந்து நிறுவப்பட்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகப் பரிணமித்துள்ளது. இதன் முதன்மை மனிதவள தொழில்நுட்பத் தளமான Gallery HR தற்போது 7 நாடுகளில் உள்ள சுமார் 350 அமைப்புகளினது நம்பிக்கையைப் பெற்று, நிறுவனங்கள், நடுத்தர வணிகங்கள் மற்றும் அதிவேகமாக வளர்ச்சி அடையும் ஆரம்ப நிலையிலுள்ள வணிகங்கள் ஆகியவற்றின் பணியாளர்களின் செயற்பாடுகளை எளிதாக்கி வருகிறது. 

Soft Gallery நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட முதல் சில வருடங்களில், விரைவான வணிக விரிவாக்கத்தை விட, வலுவான கட்டமைப்பு, பயனர் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்ட உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்தது. தயாரிப்புக்கு முதலிடம் அளிக்கும் இந்த மூலோபாய நடவடிக்கையானது, Gallery HR இனை, சிக்கலான பணியாளர் முகாமைத்துவம் மற்றும் மனிதவளம் தொடர்பான சவால்களைத் தீர்க்கும் திறன் கொண்ட ஒரு நிறுவன தரத்திற்கேற்ற தளம் என நிரூபிக்கிறது. 

இந்த புதிய அலுவலகமானது, நிறுவனத்தின் தொடர்ச்சியான வேகம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்கள் மீதான நீண்டகால அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாக அமைகிறது. Gallery HR இனை இலங்கைக்கு அப்பால் அதிவேகமாக வளர்ச்சி அடையும் சர்வதேச சந்தைகளான ஆபிரிக்காவின் முக்கிய பகுதிகள், கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு பிராந்தியங்கள் உள்ளிட்ட ஏனைய வளர்ந்து வரும் பெருநிறுவன தொழில்நுட்ப மையங்களுக்கு விரிவாக்குவதன் மூலம் ஒரு தைரியமான உலகளாவிய முயற்சிக்கான மேடையை இது அமைக்கிறது. 

இந்த அடுத்த கட்ட வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், பணியாளர் சார்ந்த முடிவெடுப்பதை மேம்படுத்தவும், தடங்கலற்ற டிஜிட்டல் ரீதியான ஊழியர் அனுபவங்களை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்ட நடைமுறை சார்ந்த AI மற்றும் தன்னியக்க பணி முன்னெடுப்புகளை (automated workflows) ஒருங்கிணைப்பதன் மூலம் Gallery HR இன் முக்கிய திறன் கட்டமைப்பை Soft Gallery மேம்படுத்தி வருகிறது. 

இது குறித்து, Soft Gallery நிறுவனத்தின் நிறுவுனரும் அதன் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையிலிருந்து அர்த்தமுள்ள தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் எனும் ஒரு எளிய யோசனை மற்றும் நம்பிக்கையுடன் நாம் ஆரம்பித்தோம். இன்று, சுமார் 350 அமைப்புகளின் நம்பிக்கையை Gallery HR பெற்றுள்ளது. ஆனால் இதை நாம் ஆரம்பமாக மட்டுமே பார்க்கிறோம். எமது புதிய அலுவலகமானது எதிர்காலத்தின் மீதான எமது நம்பிக்கையையும், எமது ஊழியர்கள், தொழில்நுட்பம், தயாரிப்புகளில் மேலும் முதலீடு செய்வதற்கான எமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இலங்கைக்கு அப்பால் போட்டியிடும் திறன் கொண்ட ஒரு தளத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளையில், Gallery HR இனை எளிமையானதாகவும், புத்திசாலித்தனமாகவும், அதிகளவில் AI மூலம் இயங்குவதாகவும் மாற்றுவதே எமது இலட்சியமாகும். இந்த பயணத்தை நம்பி, இந்த மைல்கல்லை அடைய எமக்கு உதவிய எமது குழுவினர், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் இணை நிறுவுனர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார். 

இந்தக் கருத்துகளை எதிரொலிக்கும் வகையில், இணை நிறுவுனரும், பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான சுசித் டி சில்வா, ஆரம்பகால தலைமைத்துவம் மற்றும் முதலீட்டாளர்களின் மூலோபாயப் பங்களிப்பு குறித்து எடுத்துக் கூறினார். ஆரம்பகால வழிகாட்டல், அடிப்படை மூலதனம் மற்றும் பொறியியல் திறமை மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியன சர்வதேச தரத்திலான ஒரு தளத்தை உருவாக்க இந்நிறுவனத்திற்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார். 

உலகெங்கிலும் உள்ள அலுவலகங்கள் மனிதவள முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு தரவு சார்ந்த முடிவெடுத்தல், தன்னியக்க செயற்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவை அதிகளவில் தழுவிக் கொள்வதால், Soft Gallery ஆனது, வழக்கமாக பயன்படுத்தும் மனிதவள மென்பொருள் தீர்வுக்கு அப்பால், நவீன நிறுவனங்களுக்கான முக்கிய மனிதவள செயற்பாடுகள், தன்னியக்க செயற்பாடுகள், மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் AI இனால் உந்துதலளிக்கப்பட்ட திறன்களை ஒன்றிணைக்கும் அனைத்தையும் ஒன்றிணைத்த (all-in-one) மனிதவள தொழில்நுட்பம், நுண்ணறிவு மற்றும் ஊழியர் அனுபவத் தளமாக Gallery HR மாற்றி வருகிறது. 

நிறுவனத்தின் தொழில்நுட்ப பாதை வரைபடமானது, நடைமுறை ரீதியான AI மென்பொருட்கள் மூலம் பெறுமதி சேர்க்காத நிறுவன நிர்வாகத்திலிருந்து விடுபட்டு, வணிகத் தலைவர்கள், மனிதவள பணிப்பாளர்கள் மற்றும் நிறுவனக் குழுக்களுக்கு நிறுவன கலாசாரம், திறன் மேம்பாடு, மூலோபாய வளர்ச்சியில் கவனம் செலுத்த வழி வகுக்கிறது. வலுப்படுத்தப்பட்ட செயற்பாட்டு அடித்தளம், விரிவடையும் வாடிக்கையாளர் தளம் மற்றும் தெளிவான பிராந்திய விரிவாக்க இலக்குகளுடன், தனது ஏழாவது வருடத்தில் இலங்கையின் தொழில்நுட்பப் பொறியியலை உலகளாவிய அரங்கில் காட்சிப்படுத்த Soft Gallery அடியெடுத்து வைக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM


காணொளி
பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

Mobitel 1278