Sep 21, 2026 - 11:28 AM

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய எபிசோட்டில், நிஜத்தில் தான் எதிர்கொண்ட ட்ரோல்கள் குறித்து பேசிய சல்மான், தன்னுடைய டி சர்ட்டை கழற்றி தன் உடற்கட்டை வெளிப்படுத்தினார்.
அதன்பின், 'உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லுங்கள். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியும், எங்களிடம் ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருக்கிறது. எனவே யார் என்ன செய்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எதிர்வினை ஆற்றாமல் இருக்கத்தான் நினைக்கிறோம், அவ்வளவுதான். உங்களை தாழ்த்திப் பேசி அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.
மேலும் சிலர் காசு கொடுத்து இதை ஊக்குவிக்கும் நடிகர்கள் அல்லது தயாரிப்பாளர்காக கூட இருக்கலாம். பின் மக்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள். பணத்திற்காக, படங்களுக்கு 4, 5 நட்சத்திர மதிப்பீடுகலை வழங்குகிறார்கள். அதுவும் மிகப்பெரிய ஊழல்தான், அப்படியிருக்க அறநெறி அல்லது ஒழக்கத்தை பற்றி பேச உங்களுக்கு எதாவது தகுது இருக்கிறதா?. பாய் குண்டாகிவிட்டார் என்று சொல்லி அவர்கள் என்னை ட்ரோல் செய்கிறார்கள்.
வாருங்கள், இப்போது என்னை ட்ரோல் செய்யுங்கள், என்னிடம் சிக்ஸ் பேக், உடற்கட்டு எதுவும் இல்லை. உங்களுக்கு ட்ரோல் செய்வது பிடிக்கும் அல்லவா? (சட்டையை கழட்டிவிட்டு) இதைப் பார்த்து குளோஸ் அப் ஷாட் எடுங்கள், கருத்து தெரிவிக்கும் அனைவரும், முதலில் உங்களை பார்த்துவிட்டு, பின் இதை செய்யுங்கள். எங்களை ட்ரோல் செய்வதைவிட உங்கள் பெற்றோரையும் அவர்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வது நல்லது.
பாய், நீங்கள் உடல் எடையைக் குறைத்துவிட்டீர்கள் அல்லது எடையைக் கூட்டிவிட்டீர்கள்' என்று யாராவது சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியும், ஆனால் சோஹைல், வருண் அல்லது திரைத்துறையைச் சேர்ந்த யாரையாவது கேலி செய்வது சரியல்ல. தாராளமாக உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு என்னை ட்ரோல் செய்யுங்கள். நான் கிழிந்த செருப்பைக்கூட அணிகிறேன், அடுத்த முறையும் அதே செருப்போடு வருவேன், யாராவது ஒரு உடையை மீண்டும் அணிந்தால் அவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள் என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.





























